fbpx
Homeபிற செய்திகள்செயின்ட் பொட்டானிகாவின் தூதராக நடிகை கரீனா கபூர் கான் நியமனம்

செயின்ட் பொட்டானிகாவின் தூதராக நடிகை கரீனா கபூர் கான் நியமனம்

முன்னணி ஹேர் எக்ஸ்பெர்ட் பிராண்ட் டான செயின்ட் பொட்டா னிகா பாலிவுட் நடிகை கரீனா கபூர் கானை, தனது விளம்பர தூதராக நியமித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக சண்டிகாரை அடிப்படை யாகக் கொண்டு இயங்கும் இந்த பிராண்ட், இந்தியாவில் 10,000க்கும் மேலான பின் கோடுகளுக்கு சேவை வழங்கி உள்ளது.

இந்தியாவில் கூந்தல் பராமரிப்புத் துறை $3 பில்லியன் டாலர் மதிப்புமிக்க தொழிலாகும். உயர்தரமான மற்றும் நல்ல கூந்தல் பராமரிப்புப் பொருட்களுக்கான தேவை எப்போதும் அதிகரித்து கொண்டே வருகிறது.

செயின்ட் பொட்டானிகா இயற்கை மற்றும் கரிமப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான ஆராய்ச்சியின் மூலம் கிடைத்த சூத்திரங்களின் மூலம் தயாரிக்கப்பட்டது.

பதப்படுத்தும் பொருட்களான பாராபென்கள், கனிம எண்ணெய், செ யற்கை வண்ணங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் இரசாயனங்களைத் தவிர்க்கிறது. இது சைவ பொருட்களின் வரிசையில் அமைந்து பீட்டா சான்றி தழைப் பெற்றுள்ளது.

‘எங்கள் பிராண்டின் விளம்பர தூதராக கரீனா கபூர் கானை நியமிப் பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல. மிகுந்த விவேகமுள்ளவராகவும், அழகின் ஆர்வலராகவும் அறியப்படுபவர்.

செயின்ட் பொட்டானிகா என்பது கூந்தலுக்கு உறு தியான பலன்களை அளிக்கக் கூடியது. அவர் எங்களுடன் இணைவதன் மூலம் பலரைச் சென்றடைய முடியும்’ என்று செயின்ட் பொட்டா னிகாவின் சிஎம்ஓ, அப்ராதிம்மஜூம்தர் கூறினார்.

முன்னணி நடிகை மற்றும் செயின்ட் பொட்டானிகா பிராண்டின் விளம்பர தூதுவரான, கரீனா கபூர் கான் கருத்து தெரிவிக்கையில், ‘இயற்கை மற்றும் இயற் கை தாவரவியலில் இருந்து சிறந்தவற்றைப் பெற அறிவியலின் சக்தியைப் பயன்படுத்தும் பிராண்டான செயின்ட் பொட்டானிகாவின் முகமாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

எப்போதும் எனது தலைமுடிக்கு பயன்படுத்தும் பொருட்கள் குறித்து கவனமாக இருப்பேன்.

செயின்ட் பொட்டானிகாவின் தரமான சூத்திரங்கள் மற்றும் பயோ ஆக்டிவ்ஸ் மூலம் கூந்தல் பராமரிப்பு கலை என்பது முழுமையாகும் என்ற நம்பிக்கையை எதி ரொலிக்கிறேன்’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img