fbpx
Homeபிற செய்திகள்சூலூர் கிளை நூலகத்தில் புத்தக தினவிழா- வாசிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தல்

சூலூர் கிளை நூலகத்தில் புத்தக தினவிழா- வாசிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தல்

சூலூர் கிளை நூலகத்தில் நடந்த புத்தக தின விழா நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் தலைமை வகித்தார். அவர் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்துப் பேசினார்

சூலூர் வடக்கு துவக்கப் பள்ளி ஆசிரியை சீதாலட்சுமி பேசுகையில், புத்தகங்களை வாசிப்பதன் மூலம் மனம் விசாலமடையும். உலக நடப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

நம் முன்னோர்கள் சான்றோர்கள், அறிவியலாளர்கள், ஆன்மிகவாதிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கருத்துக்களை புத்தகங்கள் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் புத்தக வாசிப்பு என்பது நாம் சுவாசிப்பதை போன்றது.
எந்நேரமும் வாசித்துக் கொண்டே இருக்க வேண் டும் படிப்பதற்கு வயது தடையில்லை.

ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் சாதித்துவிடலாம் என்று கூறினார்
பேரூராட்சி துணைத்த லைவர் சோலை கணேஷ் மற்றும் நூலகர்கள் பங்கேற்றனர்.

மாணவ மாணவியர் பங்கேற்ற கதை, கட்டுரை, ஓவியம் மற்றும் புத்தகம் வாசித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

புரவலர்கள் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இனிதா தங்கவேலு குமார் புரவலராக இணைந்து கொண்டார். சூலூர் கவுன்சிலர் மேக நாதன் கலந்து கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img