சுற்றுலாத் தொழில்முனை வோருக்கு விருதுகள் வழங்கப் படுகின்றன. தகுதி வாய்ந்தவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-&22-ம் ஆண்டிற்கான சட்ட மன்றக் கூட்டத்தொடரில், சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார்.
தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு, மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கவுள்ளது.
இந்த விருதுகள் சுற்று லாத்தொழில் முனை வோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடு களைச் செயற்படுத்தும் சுற்றுலாத் தொழில் புரிவோரையும் ஊக் குவிக்கும். பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறு வனங்கள், ஓட்டல்கள், உணவ கங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகளின் முதல் பதிப்பு 27/09/2022 அன்று வழங்கப்படும்.
விருது வகைகள்: Best Inbound Tour operator 2. Best Domestic Tour operator 3. Best Travel partner 4. Best Airline partner 5. Best Accommodation 6. Best Restaurant 7. Tamil Nadu Tourism Development corporation star performer 8. Best Niche Tourism Operator 9. Best Adventure Tourism and Camping site Operator 10. Best Meetings Incentives Conference and Exhibition (MICE) Organizer 11. Best Social Media lnfluencer 12. Best Tourist Guide 13. Best Advertisement on Tamil Nadu 14. Best Tourism Promotion Publicity Material 15. Best Educational Institution for Tourism and Hospitality.
மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27/09/2022) சென்னை யில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com http://www.tntourismawards.com/ என்ற இணையதளத்தில் பதிவி றக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்:26.08.2022. இத்தகவலை மாவட்ட ஆட் சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.



