கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர் திட்டம் II ல் வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் முத்துக்கல்லூர் எனும் பகுதியில் பிரதான நீரேற்று குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் பணி 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இதனால் பில்லூர் திட்டம் IIன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் சிங்காநல்லூர் , ஒண்டிப்புதூர் ,பீளமேடு, சவுரிபாளையம், ஆவாரம்பாளையம், கணபதி, காந்திபுரம், ரத்தினபுரி, சித்தாபுதூர் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் 26.3.2023 மற்றும் 27.3.2023 ஆகிய இரு நாட்கள் தடைபடும்.
எனவே பொதுமக்கள் சிரமத்தினை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.



