fbpx
Homeபிற செய்திகள்சாலையில் இடையூறாக உள்ள 11 மின் கம்பங்களை அகற்ற வேண்டும்: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாளில் சண்முகையா...

சாலையில் இடையூறாக உள்ள 11 மின் கம்பங்களை அகற்ற வேண்டும்: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாளில் சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின்நுகர்வோர் சேவை மையம் சார்பில், மின் நுகர்வோர்கள் குறைகளை கேட்டறியும் கூட்டம் மாப்பிள்ளையூரணி பத்திர காளியம்மன் மஹாலில் வைத்து இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்உற்பத்தி கழக முகவர் நெப்போலியன் நார்பட், மின்பாதை ஆய்வாளர்கள் ரெங்கதுரை, அண்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பா ளராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்

சண்முகையா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
கடந்த அதிமுக ஆட் சியில் இதுபோன்று ஒவ்வொரு பகுதியாக சென்று கருத்து கேட்டது இல்லை. மின்வாரியத்தில் எந்த குறை பாடுகளாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கவனமுடன் செயல்படுகிறார். நுகர்வோர் நலன் தான் முக்கியம் என்று கருதி முதலமைச்சரும் செயல்படுகிறார்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டுமென்று ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் கோரிக்கை மனுவாக அளித்துள்ளார். அதிலும் குறிப் பாக இந்த பகுதியில் கடந்த ஆட்சியில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளன.

100 மின் கம்பங்களை மாற்றிக் கொடுக்க வேண்டும். பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் காமராஜர்புரம், பாரதிநகர், ஆ.சண்முகபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ளது. அதை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

இந்த பகுதியில் ஒடை மரம், கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன. அதனாலும் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அதை முழுமையாக ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும்பட்சத்தில் மின் சார குறைகளும் தீரும் நிலை உள்ளது.
இப் பகுதிகளில் 11 மின் கம்பங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையின் ரோட்டில் உள்ளன.

அதை சாலையின் ஓரமாக அமைத்து பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் மின் வாரியம் மாற்றிக் கொடுக்க வேண்டும்.

அதே போல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் பாண்டியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மின் குறைபாடுகள் உள்ளதையும் சரிசெய்து கொடுத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது மின்வாரியத்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசினார்.

இம்முகாமில் மதிமுக இலக்கிய அணி மகாராஜன், மாணவரணி சரவண பெருமாள், பகுதி செயலாளர் பொன்ராஜ், மற்றும் விவசாயிகள், வியாபா ரிகள் உள்ளிட்ட பலர் அதிகா ரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

உதவி மின்பொறியாளர்கள் (ஊரகம்) முருகபெருமாள், உதவி செயற்பொறியாளர் (நகர்) பிரேம், செயற்பொறியாளர் (நகர்) ராம்குமார், தெற்குமாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ் பாலன், ஒன்றிய துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதி ராஜா, தங்கமாரிமுத்து மற்றும் ராஜ், வேல்ராஜ், மாரியப் பன், ராஜா, சேசு, கௌதம், ராஜ், உதவி கணக்கு அலுவலர், மதிப்பீட்டு அலுவலர் உட்பட நுகர்வோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img