fbpx
Homeபிற செய்திகள்சமூக வலைதளத்தில் புகைப்படம், சுயவிபரம் பதிவேற்றுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சமூக வலைதளத்தில் புகைப்படம், சுயவிபரம் பதிவேற்றுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

பெண்கள் தேவை யில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக, காமராஜ் கல்லூரி கலையரங்கில், மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:

கணினி வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியமான ஒன் றாகும். கணினி வழி செயல்பாடுகள் சூப்பர் மார்க் கெட் முதல் அனைத்து இடங்களிலும், நிறுவனங்களிலும் அத் தியாவசியமாக உள்ளது .

வீட்டில் இருந்து கொண்டே செல்போன் அல்லது கணினி மூலம் ஆன்லைனில் பணப்பரி மாற்றம் செய்வது முதல் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இது அறிவியல் வளர்ச்சி என்றாலும், அதில் நமக்கே தெரியாமல், கவனிக்காமல் கணினி வழி குற்றங்கள் நடைபெறவாய்ப்பு உள்ளது.

எனவே அதனைபற்றிய அறிவும் விழிப்புணர்வும் கண் டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். ஏடிஎம்கார்டு பயன்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண் டும்.
வங்கியில் இருந்து வங்கி அதிகாரி பேசுவது போன்று யாரேனும் தொடர்பு கொண்டு, வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை கேட்டால், எந்த விபரங்களையும் கொடுக்க வேண்டாம்.

பெண்கள் தேவை யில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுய விபரங்களை சமூகவலை தளங் களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.சமூக வலை தளங்களை பயன்படுத்தும் போதுமிக கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கண்கா ணிப்பாளர் பேசினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் ,சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், வரலாற்று துறை தலைவர் முனைவர் தேவராஜ், வணிகவியல் துறை தலைவர் முனைவர் பொன்னுதாய், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார், தென்பாக தனிப்பிரிவு தலைமைகாவலர் மாரிக்குமார் மற்றும் காவல் துறையினர், கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img