fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வேலைநிறுத்தம்: 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் 1200 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு

கோவையில் வேலைநிறுத்தம்: 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் 1200 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கோவையில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஸ்டீல் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த மூலப்பொருட்களான காப்பர், அலு மினியம், பேப்பர், பிளாஸ்டிக், சி.ஆர். சீட், ஸ்கிராப் ஆகியவற்றின் வி லை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இதனால் உற்பத்தி சார்ந்த தொழிலகங்கள் ஏற்கனவே ஆர்டர்களை செய்ய முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். மூலப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டி நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்னிறுத்தின.

ஆனால், இதுவரை விலை யேற்றம் கட்டுக் குள் கொண்டுவரப்படவில்லை.
இந்த நிலையில்,நாடு முழுவதிலும் உள்ள 200 சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணைந்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கோவையில் மட்டும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

கொடிசியா, டேக்ட், காட்மா, கொசிமா, கௌமா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப் புகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால்,கோவை மாவட்டத்தில் சுமார் ரூ.1200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவையில், சுந்தராபுரம், ஆவாரம்பாளையம், பீள« மடு, இடையர்பாளையம், நீலம்பூர் ஆகியவை தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள இடங்களாக உள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தொழிலகங்கள் முழு¬ யாக அடைக் கப்பட்ட சூழலில், எப்போதும் பரபரப் பாக காணப்படும் இப்பகுதிகள் வெறிச் சோடி காணப்படுகின்றன.

இதுகுறித்து டேக்ட் அமைப்பின் கோவை தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், “மூலப்பொருட்கள் விலை 100 சதவீ தத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சூழலில், இந்த விலை யேற்றம் தொழில் துறையினரை கடுமையாக பாதித்துள்ளது. உற்பத்தி 70 சதவீதம் வரை குறைந்துள்ளது.” என்றார்.

இதுகுறித்து காட்மா சங்கத்தின் தலைவர் சிவக்குமார் கூறுகையில், “நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

கோவையில் அனைத்து தொழில் அமைப்புகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருப் பதால் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளன. இதனால் கோவையில் மட்டும் ரூ.1200 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img