fbpx
Homeபிற செய்திகள்கோவையில் விளையாட்டு மைதானம் துவக்கம்

கோவையில் விளையாட்டு மைதானம் துவக்கம்

கோவை சம்ஹிதா அகாடமி பள்ளியில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதான துவக்க விழா நடந்தது.
பள்ளி முதல்வர் ராதா தலைமை தாங்கி, கால்பந்து விளையாட்டைத் துவக்கி வைத்தார்.

யுனைடெட் ஸ்போர்ட்ஸ் பள்ளி, மேக்னஸ் எப்.சி.பள்ளி, நேஷனல் ஸ்போர்ட்ஸ் பள்ளி மாணவர்கள் இப் போட்டியில் பங்கேற்றனர்.
10 வயது மாணவர்கள் ஒரு பிரிவினராகவும், 14 வயது மாணவர்கள் ஒரு பிரிவினராகவும் பங்கேற்றனர்.

முதல் பரிசை நேஷனல் ஸ்போர்ட்ஸ் பள்ளியும், இரண்டாவது பரிசை யுனைடெட் ஸ்போர்ட்ஸ் பள்ளியும், மூன்றாவது பரிசை எப்.சி. பள்ளியும் வென்றன.
ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img