fbpx
Homeபிற செய்திகள்கோவையில் உயரும் கொரோனா - கேரள எல்லையில் தீவிர சோதனை

கோவையில் உயரும் கொரோனா – கேரள எல்லையில் தீவிர சோதனை

நாட்டிலேயே கேரளாவில் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால், தமிழக எல்லை யில் ‘கிடுக்கிப்பிடி’ சோதனை யில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டிலேயே கேரளா வில் மட்டும் தான் ஒரு லட் சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகைகளுக்குப் பிறகே பாதிப்பு அதிக மாகிறது. நேற்று ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.
வழக்கமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத ங்களில் அதிக பண்டிகைகள் வருவதால் அதனால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற் றுவது போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

குறிப்பாக கேரளாவில் தொடர் நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையினால் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதை அடு த்து, 10 நாட்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோ தனை செய்வதை தீவிரப் படுத்த உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரி வித்துள்ளது.

அதன்படி தமிழக எல்லையான கோவை யில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லை யோர பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் தடுப்பூசி வழங்குவதும் வேகப்ப டுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வருவோர் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img