fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மாற்றுத்திறனாளிகள் நன்கொடை

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மாற்றுத்திறனாளிகள் நன்கொடை

தேசிய பார்வையற் றோர் இணையம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

கொரோனா தொற் றுக்கு தமிழக அரசு சார்பில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை நேற்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது

தேசிய பார்வையற்றோர் இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், மாநில துணைத்தலைவர் ஜெமினி சின்ன கண்ணன், செயலாளர் சரவண மூர்த்தி ஆகியோர் இந்த நன்கொடையை வழங் கினர்.

படிக்க வேண்டும்

spot_img