கோவை மாவட்டத்தில் இன்று 14வது மெகா தடுப் பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 13 முறை தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று 14வது முகாம் துவங்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் 714 மையங்களிலும், மாநகராட்சி பகுதிகளில் 300 மையங்களிலும், 15 அரசு மருத்துவமனைகளிலும் என மொத்தம் 1029 இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு துவங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



