fbpx
Homeபிற செய்திகள்கோவையில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி

கோவையில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி

கோவையில் நேற்று (6-ந்தேதி) இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவுநாள் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள டாக்டர் அம்பேத்கார் நினைவு பெயர் பலகை முன்பு கடைபிடிக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் அரசு மற்றும் பொதுத் துறை எஸ்.சி.எஸ்.டி. ஊழியர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் நிறுவன தலைவர் பாரத் ஜோதி தலித் ஜெயராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கார் அரசு ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் செல்லப்பா, பொருளாளர் பரமசிவம், பால் வண்ணன், ராமு, சாந்தி, கண்ணம்மாள், செயராமன், வேடபட்டி பிரவீன்குமார், செந்தில்குமார், ஊட்டி ஜெமீனா, பழனி, பஞ்சவர்ணம், ஸ்டீபன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img