கோவை, ஒண்டிப்புதூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ரெவ். டாக் \டர் ஏ.மரியா ஜோசப்புக்கு, உலக ஆசிரியர் விருது 2021, வழங்கப் பட்டது.
கற்பித்தலில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்காக இவருக்கு இந்த விருதை, மதுரையில் உள்ள கல்வி மற்றும் உளவியல் ஆராய்ச்சி மையம் வழங்கியது.
எஸ்.எஸ்.குளம், மாவட்ட கல்வி அதிகாரி விஜயேந்திரன் இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தார்.
பள்ளி முதல்வர் ஏ. மரியா ஜோசப் இந்த ஆண்டு, சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு லயன்ஸ் கிளப் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைத்துள்ளது.
ஆர்சி பள்ளிகளின் கண்கா ணிப்பாளராகவும் இவர் உள்ளார்.
கல்வித்துறையில் 2005-ம் ஆண்டு தன் பயணத்தைத் தொடங்கினார். கரூர் பசுபதிபாளையம், செயின்ட் மேரீஸ் உயர்நிலைப்பள்ளியில் தனது ஆசிரியர் பணியைத் துவக்கினார். பின்னர் அவர் கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் இன்பான்ட் ஜீசஸ் பள்ளி உள்ளிட்ட புகழ்பெற்ற பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்தார்.
பல்வேறு கற்றல் திட்டங்களில் இவரது பங்களிப்பு இருந்துள்ளது. கோவிட் நோய் தொற்று சூழ் நிலையில், மாணவர்களின் நலனுக்காக புதிய கற்றல் செயலிகளை அறிமுகப்படுத்தினார்.
அர்ப்பணிப்பு, ஆக்கப்பூர்வமான செயல்பாடு போன்றவற்றிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியராக பல்வேறு வழிகளில் மாணவர்களுக்கு ஆர்வம், ஞானம் மற்றும் அறிவுரைகளை மனதில் விதைத்துள்ளார்.
கற்றல் திறனை வழங்க எளிய முறைகளை பின்பற்றுகிறார். அசிஸ்ட் வோர்ல்ட் ரிக்கார்ட் அமைப்பில் அங்கமாக இருக்கிறார். அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்க ளுக்கும் சிறந்த உத்வேகமாக திகழ்கிறார்.
மாணவர்களின் கனவுகள், நம்பிக்கை, படைப்பாற்றலை மேம்ப டுத்த ஊக்குவிக்கிறார். கல்வித்துறையில் அவர் பல உயரங்களை எட்ட வேண்டும் என்று ஆசிரியர் சமுதாயம் அவரை வாழ்த்தி பாராட்டுகிறது என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



