fbpx
Homeபிற செய்திகள்கோவை வேளாண் பல்கலை.க்கு காளான் ஆராய்ச்சிக்கான விருது

கோவை வேளாண் பல்கலை.க்கு காளான் ஆராய்ச்சிக்கான விருது

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், புதுதில்லியில் ஓர் அங்கமாக விளங்கும் ஒருங்கிணைந்த காளான் ஆராய்ச்சி அபிவிருத்தி திட்டம், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பயிர் நோயியல் துறையில் 1983-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் காளான் ஆராய்ச்சிகளின் மூலமாக காளான் கண்டறிதல் மற்றும் காளான் ரகங்கள் வெளியீடு, மருத்துவ குணமுள்ள காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், காளான்களில் இருந்து இயற்கை சாயங்கள் மற்றும் பயிர் நோய் தடுப்புக்கான மூலக்கூறுகள், ஊடுபயிராக வைக்கோல் காளான் சாகுபடி முறைகள், கட லோர பகுதிகளுக்கான வயல்வெளிகளில் வைக்கோல் காளான் சாகு படி முறைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதனுடன் தொழில் முனைவோர், விவசாய பெருமக்கள், சுய உதவிக் குழு பெண்கள், படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் முனையும் நோக்கத்தில் ஒரு நாள் மற்றும் 5 நாட்கள் திறன் சார்ந்த காளான் சாகுபடி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆராய்ச்சிகளினால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில், சிறந்த காளான் ஆராய்ச்சி மையத்திற்கான முதன்மை விருது அறி விக்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை பெற்றதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார், விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறி, மேலும் தீவிர காளான் ஆரா ய்ச்சிகள் மேற்கொள்ள ஊக்கமளித்தார்.

படிக்க வேண்டும்

spot_img