கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே உள்ள வனப்பகுதியில் எரித்து கொல்லப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மதுக்கரை மரப்பாலம் போலீஸ் சோதனை சாவடி எதிரே தர்மலிங்கேஸ்வரர் கோவில் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில், மனித எலும்புக்கூடு கிடப்பதாக பொதுமக்கள் மதுக்கரை போலீசுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்து சுமார் இரண்டு மாதத்திற்கும் மேலான மனித எலும்பு கூடு மட்டும் கிடந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
மேலும் எலும்புகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கும் மற்ற எலும்புகள் கோவை அரசு மருத்துவமனைக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்த நிலையில், அந்த மனித உடல் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.



