Homeபிற செய்திகள்பொள்ளாச்சி அருகே 4வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் விஷம் குடித்து தற்கொலை

பொள்ளாச்சி அருகே 4வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் விஷம் குடித்து தற்கொலை

மூன்று முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவன், 4வது முறையாக நீட் தேர்வு எழுதிய நிலையில் மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பொள் ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு நம்பர் 10 முத்தூரை சேர்ந்தவர் குப்புசாமி- வளர்மதி தம்பதியர். இவர்களது மகன் கீர்த்திவாசன்(20).

இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். இதில் மூன்று முறையும் நீட்தேர்வில் தோல்வி அடைந்ததால் நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதி உள்ளார். அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கீர்த்திவாசன் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறி இந்த முறையும் தோல்வியடைந்து விடு வேனோ என மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டு தனது தாயார் வளர்மதியிடம் தான் விஷம் குடித்ததாக கூறியுள் ளார்.

இதையடுத்து கீர்த்திவாசனை மருத்துவ சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

அங்கு செல்லும் வழியில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது மாணவன் கீர்த்தி வாசன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img