fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட அரசு சிவில் வழக்கறிஞராக அருள்குமார் இன்று பதவியேற்றார்

கோவை மாவட்ட அரசு சிவில் வழக்கறிஞராக அருள்குமார் இன்று பதவியேற்றார்

கோவை மாவட்ட அரசு வழக்கறிஞராக (சிவில்) அருள்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

அதை தொடர்ந்து அருள்குமார் இன்று (புதன்கிழமை) காலை 9.45 மணிக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பதவி ஏற் றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையாக் கவுண்டர், மாவட்ட கவுன்சில் உறுப்பினர் ஆனந்தன், தி.மு.க. சட்ட நிபுணர் மூத்த வழக்கறிஞர் கணேஷ்குமார், அரசு வழக்கறிஞர்கள் கிருஷ்ண மூர்த்தி, வேடபட்டி கணேசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட அருள்குமார் கூறும்போது, தமிழக அரசு என்னை ஜி.பி.யாக நியமித்து உள்ளது.

அதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி. அரசு, அரசு சார்ந்த பணிகளை திறம்பட நடத்தி அனைவரது பாராட்டைப் பெறும் வகையில் செயல்படுவேன், என்று கூறினார். அப்போது வழக்கறிஞர் பிரபு உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img