fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி புதிய மக்கள் தொடர்பு அதிகாரியாக பாரதிதாசன் பொறுப்பேற்பு - ஆணையாளர் வாழ்த்து

கோவை மாநகராட்சி புதிய மக்கள் தொடர்பு அதிகாரியாக பாரதிதாசன் பொறுப்பேற்பு – ஆணையாளர் வாழ்த்து

கோவை மாநகராட்சியின் புதிய மக்கள் தொடர்பு அலுவலராக பாரதிதாசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆணையாளர் ராஜ கோபால்சுன்கரா வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாந கராட்சியில் கடந்த 2020ம் ஆண்டு முதல் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தவர் துரைசாமி.

இவர் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வேலூர் மண்டல அலுவலக மக்கள் தொடர்பு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு பணிபுரிந்து வந்த பாரதிதாசன் கோவை மாநகராட்சி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் அலுவலக ஊழியர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img