fbpx
Homeபிற செய்திகள்கோவை மக்களுடன் ஒன்றிய அமேசான் அலெக்சா

கோவை மக்களுடன் ஒன்றிய அமேசான் அலெக்சா

இந்தியாவில் அறிமு கப்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள மில் லியன் கணக்கான வாடிக் கையாளர்கள் அமேசான் சாதனங்களான அலெக்சா குரல் சேவையான எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டுக்கான அமேசான் ஷாப்பிங் அப்ளிகேஷன், ஃபயர் டிவி சாதனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அலெக்சா பில்ட்-இன் ஸ்பீக்கர்கள், டிவிக்கள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பிற பிராண்டுகளின் மூலம் பயன்படுத்தியுள்ளனர்.

கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மெட்ரோஅல்லாத நகரங்களில் இருந்து, கிட் டத்தட்ட 50% வாடிக் கையாளர்களுடன், 2021ல் அலெக்சாவுக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டைவிட 68% அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான இசை, நர்சரி ரைம்கள், ஸ்மார்ட் ஹோம் அப்ளையன்ஸ்களைக் கட்டுப்படுத்துதல், தகவல் கேட்பது, பில் பேமெண்டுகள், அலாரங்கள், ரிமைண்டர்கள், கேம்களை விளையாடுதல் மற் றும் பலவற்றை கேட்க ஆங்கிலம், ஹிந்தி மற்றும் ஹிங்கிலிஷ் மொழிகளில் அலெக்சாவுடன் தொடர்பு கொள்ளலாம்.

“எங்களின் அதிநவீன எக்கோ ஷோ 10 போன்ற இன்டெலிஜெண்ட் மோ ஷன் அம்சத்துடன், அலெக் சாவை இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து பணி யாற்றி வருகிறோம்.

அதுவும், இந்தியாவின் முதல் செலிப்பிரிட்டி குரலாக நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அலெக்சா உள்ள மைக்கப்பட்ட மஹிந்திரா ‘‘XUV700
வாகனம்’ என பல விதங்களில் வாடிக்கை யாளர்களை மகிழ்வித்து வருகிறோம்” என்று அமேசான் இந்தியா நிறு வனத்தின் அலெக்சா பிரிவு தலைவர் புனீஷ் குமார் கூறினார்.

வாடிக்கையாளர்கள் தினமும் 11,500 கேள்விக ளைக் கேட்டனர். வாடிக்கையாளர்கள் அலெக்சாவுடன் தங்கள் நாட்களைத் தொடங்குவதையும் முடிப்பதையும் விரும்பினர்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் 11,520 முறை “அலெக்சா, காலை வணக்கம்“ மற்றும் “அலெக் சா, குட் நைட்” என்று வாழ்த்தினார்கள் என்பது ஹைலைட்.

படிக்க வேண்டும்

spot_img