fbpx
Homeபிற செய்திகள்கோவை: நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை தூதுவர்கள் மரக்கன்றுகள் நடும் பணி

கோவை: நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை தூதுவர்கள் மரக்கன்றுகள் நடும் பணி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.68க்குட்பட்ட வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை தூதுவர்கள் மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொது சுகாதாரக் குழுத்தலைவர் மாரிச்செல்வன், பணிக்குழு தலைவர் சாந்திமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் கமலாவதி போஸ், பிரபா ரவீந்திரன், வித்யா, நகர்நல அலுவலர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், முருகன், ஜெரால்டு சத்ய புனிதன், தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img