fbpx
Homeபிற செய்திகள்கம்ப ராமாயணம் இலக்கிய உரையாடல்

கம்ப ராமாயணம் இலக்கிய உரையாடல்

தமிழ் இலக்கியங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சவீதா தமிழ் மன்றம், கடந்த வாரம் முதல் கம்பராமாயணத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.

தொடர்ந்து கடந்த வாரங்களில் கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.

சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் செல்லுதல், சீதையைக் கண்டறிந்து இராமன் கூறிய செய்திகளைக் கூறுதல், இராவணனிடம் சென்று இராமனின் சிறப்புகளை எடுத்துக் கூறி எச்சரிக்கை செய்தல், இராவணன் அனுமனின் வாலில் தீ வைத்தல், அந்த தீயைக் கொண்டு அனுமன் இலங்கையை எரித் தல், இறுதியாக சீதையைக் கண்ட செய்தியை இராமனிடம் கூறி அவனது ஆலிங்கனத்தைப் பெறுதல் போன்ற செய்திகள் இலக்கிய உரையாடலில் இடம் பெற்றன.

சிமாட்ஸ் பொறியியல் பள்ளி மற்றும் சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இவ்விலக்கிய உரையாடலில் கலந்து கொண்டு மேற்கூறிய அம்சங்களை வெகுவாய் விளக்கி நிகழ்வை சிறப்பித்தனர்.

சிமாட்ஸ் பல்கலைக் கழக வேந்தர் மருத்துவர் ந.மா.வீரய்யனின் தமிழ் இலக்கிய ஆர்வமும் வழிகாட்டுதலுமே இத்தகைய சிறப்பான நிகழ்வு தொடர்ந்து நடைபெறக் கார ணமாகும்.

படிக்க வேண்டும்

spot_img