fbpx
Homeபிற செய்திகள்கோவை, திருப்பூர் உள்பட 6 நகரங்களில் டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் கிளை திறப்பு

கோவை, திருப்பூர் உள்பட 6 நகரங்களில் டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் கிளை திறப்பு

இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறு வனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ், தனது சேவையை விரிவாக்கும் வகையில், கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் புதிதாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட 6 கிளைகளை திறந்து உள்ளது

முக்கிய நகரங்களான ஓசூர், காஞ்சிபுரம், அடையார், கோவை ஆர்எஸ்புரம், பூந்தமல்லி, திருப்பூர் ஆகிய இடங் களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது 25 மாநிலங்களில் 218-க்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது.

டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநரான நவீன் தஹில் யானி கூறுகையில், “இன்றைய சவாலான சூழ்நிலைக்கு மத்தியில், டாடா ஏஐஏ லைஃப் நிறுவனத்தில், பல் வேறு நுகர்வோர் சேவை முறைகள் மூலமாக, குறிப்பாக தமிழகத்தில் மக்கள் எளிதில் சென்ற டைகிற வகையிலான இடங்களில் அமைந்துள்ள கிளைகள் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க முடியும் என்பதை உறுதி செய்கிறோம்.

இந்த கிளைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதால், புதிய யுகத்தின் வாடிக் கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய, அவை நம்மை அனுமதிக்கும்.

அதே நேரத்தில் ஆயுள் காப்பீட்டு துறையை இன்னும் வலுவாக்கி விரைவுபடுத்தும் அரசின் முயற்சிகளை ஆதரிக்கவும், மேலும் தொடரும் பெருந்தொற்றின் தொடர்பான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகளை பராமரிக்கவும் உதவும்” என்றார்.

டாடா ஏஐஏ லைஃப் இன்சூரனஸ் நிறுவனத்தின் தலைமை முகமை அலுவலர் அமித் தவே கூறுகை யில், ஏஜென்சி விநியோகம் இல்லாத இடங்களில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிளைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இது எங்களது சேவைகளை விரிவாக்கம் செய்யவும் உள்ளூர் மக்களுக்கு பாது காப்பு மற்றும் சேமிப்புக்கான தீர்வுகளை வழங்குவதற்கும் உதவும். தமிழகத்தில் ஆயுள் காப்பீட்டு ஏஜென்சியை தொழிலாக செய்ய விரும்புபவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கஇந்த நடவடிக்கை வழிவகுக்கும்.

நேரடியாக ஊதியம் பெறும் ஊழியர்களுடனும், மறைமுகமாக டிஜிட்டல் மயமாக்கப் பட்டதும், அதிக பயிற்சி பெற்ற லைஃப் இன்சூரன்ஸ் ஆலோசகர்களுடனும் தொடர்புடையதாகும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img