கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.93க்குட்பட்ட மணிகண்டன் நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில் 6.27 கிலோ மீட்டர் தொலைவிற்கு 45 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் இனஞ்சேகரன், பாபு, அப்துல் காதர், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார ஆய்வாளர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



