fbpx
Homeபிற செய்திகள்கோவை இரும்பு வியாபாரி வீட்டில் லாக்கரை உடைத்து துணிகரம்: ரூ.45 லட்சம் நகைகள் கொள்ளை

கோவை இரும்பு வியாபாரி வீட்டில் லாக்கரை உடைத்து துணிகரம்: ரூ.45 லட்சம் நகைகள் கொள்ளை

கோவை கணபதி மணியகாரம்பாளையம் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.45லட்சம் மதிப்புள்ள 131 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை கணபதியை அடுத்த மணியகாரம்பாளையம் வேலவன் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரது மகன் தினகரன் வயது 44. தனது மனைவி இரு குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார். வெள்ளக்கிணறு பகுதியில் தினகரன் என்ற பெயரில் இரும்புக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுவிட்டு இன்று அதிகாலை 2 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பியவர் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தினகரன் வீட்டினுள் சென்று பார்த்தபோது முன் அறையில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இருந்தது மற்றும் படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 10 சவரன் மாங்காய் மாலை, 10 சவரன் தங்க ஆரம், 28 சவரன் வளையல், 20 சவரன் கம்மல் செட், 10 பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் உள்ளிட்ட மொத்தம் சுமார் ரூ.45லட்சம் மதிப்புள்ள 131 சவரன் நகைகள் கொள்ளை அடிக் கப்பட்டது அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து தினகரன் உடனடியாக சரவணம் பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடம் விரைந்து வந்த காவல்துறையினர் ஆய்வு செய்ததுடன் கைரேகை பதிவுகளையும் மற்றும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்களிடையே இக் கொள்ளைக் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் காவல்துறை சரியான ரோந்துப் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே இத்தகைய கொள்ளைச் சம்பவங்களில் இருந்து பொது மக்களை காக்க முடியும் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img