கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையத்தை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம் அமைக் கப்பட்டுள்ளது.
இதனை தொடங்கி வைத்து ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செய் தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் அறிவு றுத்தல்படி கோவை அரசு மத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப் பட்டுள்ளது.
முதல் கட்டமாக அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகள், புற நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 24 மணி நேர மையத்திற்கு தேவைக் கேற்ப தடுப்பூசிகள் வழங்கப்படும்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யைத்தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பிற அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம் விரைவில் திறக்கப்படும் என்றார்.



