fbpx
Homeபிற செய்திகள்கேழ்வரகு நாற்று நேர்த்தி விவசாயிகளுக்கு பயிற்சி

கேழ்வரகு நாற்று நேர்த்தி விவசாயிகளுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப் பட்டினம் அடுத்த ஜெகதாப் கிராமத் தில் கேழ்வரகு நாற்று நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு அதியமான் வேளாண் மைக் கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனர்.

இப்பயிற்சியில் கேழ்வரகின் நாற்றை அசோஸ்பைரில்லம் என்னும் உயிர் உரத்தை தண்ணீருடன் கலந்து நனைத்துப் பின் நடவு செய்யும் முறையை பற்றி எடுத்துரைத்து அதன் செய்முறைகளை செய்து காட்டினர்.

இப்பயிற்சியில் அதியமான் கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியர் கேபரியல்
மற்றும் மாணவிகள் மணிமொழி, கலைவாணி, ஜோதினிவர்ஷா, கார்த்திகா, கரிஷ்மா மற்றும் கௌசல்யா ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img