fbpx
Homeபிற செய்திகள்கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக எல்லை வாளையாறு பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர்...

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக எல்லை வாளையாறு பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

கேரளாவில் நிபா வைரஸ் பரவலை தொட ர்ந்து தமிழக – கேரளா எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக சுகாதாரத்துறை செய லாளர் ராதா கிருஷ் ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கோவை – கேரள எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவலம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடி களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு கூடுதல் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கண்காணிப்பு பணிகளை கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நிபா வைரஸ், ஜிகா வைரஸ் மற்றும் கொரோனா பாதிப்பு கேரளாவில் கண்டறியப்படுவதால் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து கோவை வருவோரிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் மற்றும் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதோடு மாவட்டத்திற்கு வருவோரின் வாகன எண்கள் பதிவு செய்யப்படுகிறது.

வாகன சோதனைகளை கடுமையாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொசு மூலமாக பரவும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்பு மூலமாக நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்.

கோவை மாவட்டத்தில் 83 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளது. தொற்று பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. மூன்றாவது அலைக்கு செல்லாமல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

கோவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களில் 43% மக்களுக்கு மட்டுமே எதிர்ப்பு சக்தி உள்ளதாக கண்டறியப்பட்டது.

மாவட் டத்தில் அதிகப்படியான தடுப்பூசி செலுத்தப்பட்டதின் காரணமாக எதிர்ப்பு சக்தி 55 சதவீதமாக அதிகரித்து உள்ளதாகவும் 45% மக்க ளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காரணத்தால் அவர்கள் கவனத்துடன் இருக்குமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img