fbpx
Homeபிற செய்திகள்மரக்கன்று, மூலிகை தாவரகன்று வழங்கல்

மரக்கன்று, மூலிகை தாவரகன்று வழங்கல்

தர்மபுரி மாவட்டம், நூல அள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஹோமியோபதி பிரிவு மற்றும் தர்மபுரி ஸ்ரீ கிருஷ் ணா பாரா மெடிக்கல் கல்லூரி ஒன்றிணைந்து ,மக் களைத் தேடி மரக்கன்று கொடுக் கும் விழாவை நூல அள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தியது.

மூலிகை மற்றும் தாவர கன்றுகள் கர்ப்பிணி களுக்கும், மருத்துவ பணி யாளர்களுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் வழங் கப்பட்டன. ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஹோமியோபதி மருத் துவர் ரவிச்சந்திரன், மருத்துவ அலுவலர் உஷா நந்தினி இருவரும் தலைமை தாங்கினர்.

ஸ்ரீ கிருஷ்ணாபாரா மெடிக்கல் கல்லூரி யின் தாளாளர் பி.கிருஷ் ணமூர்த்தி, கல்லூரி பேராசிரியர் மகேஸ்வரி, முனைவர்பொன்னம்பலம், கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கல்லூரி மாணவ, மாணவிகள், இந்த மூலிகை தாவரத்தின் பயன்களைப் பற்றியும் மூலிகை தாவரத்தின் நற்குணங்களைப் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்து ரைத்தனர். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் … அனைவரும் நோயில்லாமல் வாழ்வோம்… என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img