கே.பி.ஆர். தொழில் நுட்பக் கல்லூரியில்‘ கிலெளட் கம்ப்யூட்டிங்’ பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் போலந்து நாட்டின் வார்சா ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பன்னாட்டு அலுவலகத் தலைவர் வெரோனி காஜக்கு போவ்ஸ்கா மற்றும் கணினி அறிவியல், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் தாமஸ் ததேயுஸ் சீமெக் ஆகியோர் கிலௌட் கம்ப்யூட்டிங் துறையில் உள்ள தற்போதைய தொழில்நுட்பங்கள் மற்றும் அது சம்பந்தமான சேவைகள் வழங்கும் முன்னணி நிறுவனங்கள் பற்றி கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றினர்.
கிலௌட் கம்ப்யூட் டிங் துறையில் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கு எதிர்காலம் மற்றும் அதில் உள்ள வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தனர்.
பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். போலந்து நாட்டில் இங்குள்ள மாணவர்களுக்கான வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு.அகிலா த¬ லமை தாங்கினார்.
அனைத்துத் துறை பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.



