fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவிலான கல்லூரி முதல்வர்கள் சந்திப்பு

தேசிய அளவிலான கல்லூரி முதல்வர்கள் சந்திப்பு

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கல்விமான்களின் சந்திப்பு நடந்தது. இருபது கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா.அனிருதன் வரவேற்றார். நேரு கல்வி குழுமத்தின் முதன்மை கல்விச் செயலர் முனைவர் பி.கே.கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர்கள் ஒருவரையொருவர் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த மற்றும் நவீன வளர்ச்சிக்கான வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைகள் நடந்தன.

தலைமைப் பண்பு என் பது பொறுப்புகளை தான் மட்டும் சுமப்பது அல்ல. மற்றவர்களுக்கு பகிர்வதோடு, அவர்களை தலைவர்களாக உருவாக்குகிற அரிய முயற்சியாகும். அவ்வகையில், சிறந்த குடிமகன்களாக மாணவர்களை உருவாக்க வேண் டும் என்ற உயரிய நோக் கத்தோடு இந்த சந்திப்பு நடந்தது.

கல்லூரி முதல்வர்கள் கல்லூரிகளின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதி கையொப்பமிட்டனர். சாரதா கங்காதரன் கல்லூரியின் முதல்வர் மு¬ னவர் கே. உதயசூரியன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் பள்ளி மற்றும் சமூக பணியில் துறை புலமுதன்மையர் மோக.கனகரத்தினம் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img