fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கல்

கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கல்

கேபிஆர் கலை அறி வியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, வேலைவாய்ப்புத் துறை சார்பாக, வேலை வாய்ப்பு மற்றும் மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நாள் அனுசரிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் செ.பாலுசாமி வரவேற்றார்.

நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி தலைமை தாங்கி பேசினார்.
கல்லூரி ஆலோ சகர் முனைவர் எஸ்.ராமசந் திரன் வாழ்த்துரை வழ ங்கினார். கேபிஆர் கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புத் துறை இயக்குனர், முனைவர் பி. தாமரைக்கண்ணன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

ஒடிசா, மாநில திரைப் பட விருது பெற்ற டாக்டர் இத்தி ராணி சமந்தா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் பணியிடத்தில் செயலாற்ற வேண்டிய முறைகள் குறித்தும் மாணவர்கள் வெற்றியாளராக உருவா வதற்கான வழிமுறைகள் குறித்தும் குறிப்பிட்டார்.

2021-22-ம் கல்வியாண் டில் 98.1% மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர்

. 52 மாணவர்களில் 29 பேர் இன்போசிஸ் நிறுவனத்திலும், 10 மாணவர்கள் எச்சிஎல் நிறுவனத்திலும், 4 மாணவர்கள் எக்ஸ்ட்ரா மார்க்ஸ் நிறுவனத்திலும், 4 மாணவர்கள் Avasoft நிறுவனத்திலும், 4 மாண வர்கள் Disys நிறுவனத்திலும், 2 மாணவர்கள் டிசிஎஸ் நிறு வனத்திலும், 1 மாணவன் விப்ரோ நிறுவனத்திலும், பிற மாணவர்கள் பிஎஸ் எச் நிறுவனத்திலும் பணி யமர்த்தப்பட்டனர்.

கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சியாளர் கீர்த்திகா தேவி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img