ஒவ்வொரு ஆண்டும் மே 18ஐ சர்வதேச அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு நான்கு நாட்கள் கோடைக்கால கலைப்பயிற்சி வகுப்பு நடந்தது. முதல் நாளான 16ம் தேதி ஓவிய ஆசிரியர் பன்னீர்செல்வம் 90 மாணவ, மாணவியருக்கு அடிப்படை ஓவியப் பயிற்சியை அளித்தார். இரண் டாம் நாளான 17ல் கலை ஆசிரியர் அண் ணாமலை, களிமண் பொம்மை செய்யும் பயிற்சியை அளித்தார்.
மூன்றாம் நாளான நேற்று காவேரிப் பட்டணம் சாரதாமணி, மாணவ, மாண வியருக்கு அடிப்படை யோகாசனம் குறித்த பயிற்சியை அளித்தார். இதில் 85 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
நான்காம் நாளான இன்று (மே 19) சாக்பீஸில் சிற்பங்கள் செய்யும் பயிற்சியை அரியலூர் அருங்காட்சியக மாதிரி அமைப்பு கலைஞர் அசோகன் அளித்துள்ளார். பயிற்சியின் முடிவில், பங்கு பெற்ற மாணவ, மாணவியருக்கு காப்பாட்சியர் கோவிந்தராஜ் சான்றிதழ் களை வழங்க உள்ளார்.
பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி மற்றும் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்க £ன ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியா ளர்கள் செல்வம் மற்றும் பெருமாள் ஆகியோர் செய்துள்ளனர்.



