fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். கலைக் கல்லூரியில் ‘உற்சவம் 22’

கே.பி.ஆர். கலைக் கல்லூரியில் ‘உற்சவம் 22’

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விழா “உற்சவம்-22” நடைபெற்றது.

கல்லூரியின் ஆலோசகர் முனைவர் எஸ். ராமசந்திரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் செ.பாலுசாமி ஆண்டறிக்கை வாசித்தார். கே.பி.ஆர். குழு மங்களின் தலைவர் டாக்டர் கே.பி. இராமசாமி நிகழ்வு சிறக்க தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர் முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை குப்புசாமி பேசும்போது, சமுதாயத் தில் மாணவர்களது பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவர்களுக்கு இளைய பாரதத் திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கமாகவும், மிக அழகாகவும் எடுத்துரைத்தார்.

மத்திய, மாநில அளவிலான போட்டித் தேர்வு களில் மாணவர்களுக்குள்ள வாய்ப் புகள் குறித்து விளக்கினார். இத்தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடாமல், அதன் காரணங்களை கண்டறிந்து திறம்பட செயலாற்ற வேண்டும் எனவும் ஊக்கமளித்தார்.

உற்சவம்-22 நிகழ்வில், குழு நடனம், தனிநடனம், தனிப்பாடல், மெகந்தி, நிழற்படக் காட்சிப்படுத்தல், கோலப்போட்டி, வாசகம் எழுதுதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பணியில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் சிறந்த துறைக் கான சுழற் கோப்பையை மேலா ண்மையியல் துறை (BBA) வென்றது.

வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஏ.சாந்தி மற்றும் வணிகவியல் மற்றும் கணினிபயன் பாட்டியியல் துறைத்தலைவர் முனைவர் எம்.சேகர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் துறை மாணவன் செல்வன் வி.ஜதவேதாஸ் நன்றி கூறி னார்.

படிக்க வேண்டும்

spot_img