fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கூட்டுறவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் சரகத்திற்கு உட்பட்ட பவானி வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நிறு வனப் பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு, ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை, சீமா தொண்டு நிறுவனம், கேர் தொண்டு நிறுவனம், பிவெல் மருத்துவமனை, ஈரோடு கேன்சர் சென்டர், வாசன் கண் மருத்துவமனை மற்றும் கலா பல் மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை தள வாய்ப்பேட்டை, கொங்கு திருமண மண்டபத்தில் நடத்தியது.

கோபி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

பொது மருத்துவம், சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, கண், பல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டுறவு நிறுவனப்பணியாளர்கள் 240-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

சீமா தொண்டு நிறுவனம், பி.வெல் மருத்துவமனை டாக்டர் மெய்.எஸ்.அப்பாச்சி, வாசன் கண் மருத்துவமனை குழுவினர், ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனை குழுவினர், கலா பல் மருத்துவமனை குழுவினர், பவானி வட்டார கூட்டுறவு சார்பதிவாளர்கள்/கள அலுவலர்கள், சங்கச் செயலாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img