குவாலிட்டி ஸ்டாண் டர்ட் மிஷன்10500 க்கு இணங்க ஜூலை 26 முதல் குழாய்களின் மூலம் பாதுகாப்பான குடிநீரை 24ஜ்7 மணி நேரமும் வழங்கி சாதனை நிகழ்த்திய முதல் இந்திய நகரமாக பூரி திகழ்கிறது.
இது ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாய்க் தலைமையில் ஒடிஷா அரசு மேற்கொண்ட ‘சுஜல்’அல்லது ‘குழாயில் நீர் பருகுங்கள்’ என்ற இயக்கத்தின் முன் முயற்சியாகும்.
இந்த மாற்றத் துக்கான முயற்சியின் மூலம் உள்ளூர் மக்களில் 2.5 இலட்சம் பேரும் மற்றும் கடவுள் ஜகன்நாத்தின் நகரத்திற்கு ஆண்டு தோறும் வருகை புரியும் 2 கோடி பயணியர்களும் பயன்பெறுவார்கள்.
மக்களுக்கு நேரடியாக குழாய் வழியாக குடி நீரை வழங்கும் இந்த இற்றைக்கலைநிலை தொழில்நுட்பம், முதல் முறையாக அரங்« கறியிருக்கிறது. லண்டன், சிங் கப்பூர், நியூயார்க் போன்ற நகரங்களுக்கு இணையாக பூரி நகர் சேர்ந்துள்ளது.
ஒடிஷா முதல்வர் ‘ குழாய் மூலம் குடிநீர் பருகுங்கள் இயக்கத்தின் ‘சுஜல்’ செயல் திட்டத்தை பூரி நகரில் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்து “குழாய் வழியாக தரமான குடிநீரை’பருகுங்கள் என்ற குடிநீர் வழங்கல் அமைப்பை ஆண்டவன் ஜகன்நாத்தின் புகழ் மற்றும் பூரி நகர மக்களுக்கு அர்ப்ப ணிப்பதாக கூறினார்.
பூரி நகரத்தைத் தவிர, ஒடிஷாவெங்கிலும் உள்ள இதர 16 நகரங்களில் 40 லட்சம் மக்களை சென்றடைவதற்கு இந்த இயக்கம் வெற்றிநடை போட்டு வருகிறது.
தடை யில்லாமல் தரமான குடிநீர் வழங்க செயல் படுத்தப்பட்ட சிறப்பு நீர் மேலாண்மை தொழில்நுட்பம் தேசிய அளவில் கௌரவங்களை வென்றிருக்கிறது- இரண் டாவது நேஷனல் வாட்டர் அண்டு சானிடேஷன் இன்னோவேஷன் சம் மிட்டில் சிறப்பு செயல்பாட்டுக்கான விருது அளிக்கப்பட்டது.
18 -வது சிஎஸ்ஐ எஸ்ஐஜி இ கவர்னன்ஸ் CSI-SIG e Governance) அவார்டு வழங்கும் விழாவில் சிறப்பு செயல்பாட்டுக்கான விரு தை வென்றிருக்கிறது.
வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சியின் மாநில அமைச்சர், பிரதாப் ஜெனா, இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச் சகத்தின் செய லாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



