குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகருவதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கட லோர மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் சென்னை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங் களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கேரளாவில் 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கனமழை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், 12 இயற்கை பேரிடர் மேலாண்மை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல நாளை (அக்.30) நெல்லை, ராமநாதபுரம், தென் காசி, தூத்துக்குடி மாவட் டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.



