ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் கீழக்கரை நகர் இளைஞரணி அமைப்பாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் ஏற்பாட்டில் ஏழை, எளியவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டது.
இதில் நகர செயலாளர் எஸ்.ஏ.எச்.பசீர் அகமது, நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



