கொச்சியை தலைமையிட மாகக் கொண்டு செயல்பட்டு வரும் காயர் போர்டு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனம், இந்திய அரசின் கயிறு வாரியத்துடன் இணைந்து, தேசிய கயிறு வாரிய மாநாட் டினை நேற்று (மே 5ம் தேதி) கோவை அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடத்தியது.
75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆசாதி க அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெற்றது.
இதில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. நாராயண் ரானே தலைமை விருந்தினராக பங்கேற்றார். இணை அமைச்சர் திரு. பானு பிரதாப் சிங் வர்மா மற்றும் காயர் போர்டு தலைவர் குப்புராமு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த மாநாட்டில் காயர் விகாஷ் யோஜ்னா பற்றிய செயல் திட்டம், தென்னை பயிரிடுதல் மற்றும் தேங்காய் உற்பத்தியின் அவசியம், தென்னை மட்டை களின் பயன்பாட்டினை அதி கரித்தல், கயிறு துறையில் மதிப்பு கூட்டு பொருட்கள், மத்திய மாநில அரசு துறைகளில் நார் பொருட்களின் கட்டாய கொள்முதல், கயிறு வாரியத்தின் சந்தை மேம்பாட்டு உதவி திட்டங்கள், ஏற்றுமதி வசதி வாய்ப்பு திட்டங்கள், நார் துறையில் உள்ள கடன் வசதி திட்டங்கள், கயிறு துறையில் பாரத பிரதமரின் வேலை வாய்ப் புக்கான திட்டங்கள், மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்களை அறிதல், மாநில அரசின் கயிறு தொழிலாளர்களுக்கு மாநில அரசின் நல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக காயர் மாரத்தான் போட்டி இன்று “ரன் பார் காயர்” என்ற பெயரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று (மே 6-ம் தேதி) காலை 6.30 மணிக்கு துவங்கியது.
காயர் போர்டுடன் கோவை மாவட்ட அத்லட்டிக் அமைப்பு இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்தியது. இந்த போட்டியை மத்திய அமைச்சர்கள் நாராயண் ரானே, பானு பிரதாப் சிங் வர்மா ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தார்கள்.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் செயலாளர் பி.பி.ஸ்வைன், காயர் போர்டு தலைவர் குப்புராமு, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சைலேஷ் குமார் சிங், இணை செயலாளர் அல்கா அராரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் கருத்தாக்கம், “உலக வெப்ப மயமாதலை மீட்க தீர்வு – கயிறு நார்” என்பதாகும். இந்த மாரத்தான் போட்டியில் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் பிரிவு 8-ம் வகுப்பு மாணவ மாண விகளுக்கானது. இதில் கலந்து கொண்டவர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடினார்கள்.
இரண்டாம் பிரிவு 9 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கானது. இதில் கலந்து கொண்ட பெண்கள் 3 கிலோ மீட்டரும் ஆண்கள் 5 கிலோ மீட்டர் தூரம் பங்கேற்று ஓடினார்கள்.
மூன்றாவது பிரிவு கல்லூரி மாணவ மாணவிகளுக்கானது. இதில் பெண்கள் 5 கிலோ மீட்டரும், ஆண்கள் 10 கிலோ மீட்டரும் பங்கேற்று ஓடினார்கள். நான்காவது பிரிவு 18 – வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெண்கள் 5 கிலோ மீட்டரும், ஆண்கள் 10 கிலோ மீட்டரும் பங்கேற்று ஓடினார்கள்.
இந்த மாரத்தான் போட்டி நேரு விளையாட்டு அரங்கின் முகப்பில் துவங்கி, நேரு விளை யாட்டு அரங்கை ஒரு முறை சுற்றி, ஆபீஸர்ஸ் கிளப் வழியாக, ஏ.டி.டி. காலனி வழியாக சென்று பாலசுந்தரம்; ரோடு பெண்கள் பாலிடெக்னிக் வரை சென்று மீண்டும் அதே வழியாக திரும்ப அண்ணா சிலை வரை சென்று மீண்டும் அதே பாதையில் ஏ.டி.டி. காலனி கேரளா கிளப் வழியாக மீண்டும் நேரு ஸ்டே டியத்தை வந்தடைந்தது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு மொத்தம் 1.20 லட்சம் பரிசாக வழங்கப் பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பரிசுகளை வழங் கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், அமைச்சர்கள் பொள்ளாச்சியில் உள்ள கயிறு நார் தொழிற்சா லைகளுக்கு சென்று பார்வை யிடுகின்றனர்.



