கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனம் பெங்களூரை தலைமையிட மாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அல்லாத நிதி சேவை மற்றும் சிறுநிதி சேவை நிறுவனம் இது.
இந்நிறுவனம் இதன் கடந்த மாத வர்த்தக செயல்பாடுகளை ஸ்டாக் எக்சேஞ்சில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதில் கோவிட்டுக்கு முந்தைய நிலையில் கடன் வழங்குதல் மற்றும் கடன் வசூல் ஆகியவை கோவிட்டுக்கு பிந்தைய நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நிலுவைத் தொகையை தவிர்த்து இந்நிறுவனத்தின் தனி யான கடன் வசூலானது, கடந்த மாதத்தில் 92.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியான நிலுவைத் தொகை வசூலானது கடந்த மாதம் 99 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுநிலுவைத் தொகை வசூலில் நிலையான முன்னேற்றத்தைக் குறிக்கி றது. முதலீடு வரம்பு ஆபத்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் குறைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக, ஒருங்கிணைந்த நிதிநிலை அடிப்படையில், கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனத்தின் மொ த்த கடன் இலாகாவானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியில் 16.7 சதவீதம் வளர்ச்சி கண்டு 13,259 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் வரை 1424 கிளைகளைக் கொண்டிருந்த இந்நிறுவனத்தின் கிளைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1527ஆக உயர்ந்துள்ளது.
சிறப்பான வளர்ச்சி குறித்து கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனத் தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான உதய்குமார் ஹெப்பர் கூறியதாவது:
எங்களின் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கியதோடு, புதிய வாடிக் கையாளர்களைச் சேர்ப்பதிலும் அதிக கவனம்செலுத்தினோம்.
எங்கள் மாதாந்திர கடன் வழங்கல் களையும் படிப்படியாக அதிகரித்தோம்.
இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
வரவிருக்கும் மாதங்களில் நிலுவைத் தொகையை குறைக்க உதவும் மாதாந்திர சேகரிப்பு செயல்திறனை மேலும் அதிகரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நாடு முழுவதும் தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளது. இதுபொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எனவே நிதிஆண்டு 2022-ல் நேர்மறையான முன்னேற்றம் இருக்கும் என்று நம்பு கிறோம் என்றார்.



