fbpx
Homeபிற செய்திகள்தூய்மைப் பணியாளருக்கு கடனுதவி - அரசு நடவடிக்கை மேற்கொள்ள தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையக்குழு தலைவர் அறிவுறுத்தல்

தூய்மைப் பணியாளருக்கு கடனுதவி – அரசு நடவடிக்கை மேற்கொள்ள தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையக்குழு தலைவர் அறிவுறுத்தல்

தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பயன்பெறத்தக்க வகையில், கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை பெற்று, கடனுதவிகளை வழங்கிட நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய தூய்மைப்பணியாளர் ஆணை யக் குழுத்தலைவர்எம்.வெங்க டேசன் அறிவுறுத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (செப்.22) ஆதிதிராவிடர், பழங்கு டியினர் இனமக்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அனைத்து நலக்குழு உறுப்பினர்களிடம் குறை கேட்கும் கூட்டம், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய குழுத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் டாக் டர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், ஊராட்சி ஒன் றியங்கள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், தாட்கோ, ஆதிதிராவிடர் நலத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை, ஒப்பந்ததூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை, தினக்கூலி தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை, பணி நிரந்தரம் செய்ய தகுதியான நபர்களின் எண்ணிக்கை ஆகியனகுறித்தும், அவர்களின் ஊதியம், மருத்துவ வசதிகள், அவர்களின் குழந்தைகளுக்குவழங்கப்படும் கல்வி மற்றும் கடனுதவி போன்றவை குறித்தும் நேர டியாக கண்காணிப்புக்குழு உறுப்பினர்களிடமும், பணி யாளர்களிடமும், சங்கங்களின் பிரநிதிகளிடமும் கேட்டறிந்தார் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய குழுத்தலைவர்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனமக்கள், தூய்மைப் பணி யாளர்களின் நலனுக்காக அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், அவர்களுக்கு தேவையான குடியிருப்பு, குடியிருப்பிற்கான பரா மரிப்பு நிதியுதவி, அனைத்து தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி வழங்குதல், மருத்துவ வசதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் அவர்களை பயன்பெறச் செய்து வருகிறது.

இத்திட்டங்கள் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உள்ளாட்சித் துறைகள், தாட்கோ, பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட முன்னோடி வங்கி போன்ற துறைகளின் வாயிலாக சிறப் பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நிரந்தர தூய்மைப் பணி யாளர்களுக்கு அரசு நிர் ணயித்த ஊதியத்தினை நேர டியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திடவும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர் களுக்கான ஊதியத்தினை ஓப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்படுவதை சரிவர கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்.

தூய்மைப் பணி யாளர்களின் பணிக்குத் தேவையான சீருடைகள், கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களை தொடர்ச்சியாகவும், சரிவர வழங்கிட வேண்டும்.குறிப்பாக கொரோனா கால கட்டத்தினை கருத்தில் கொண்டு, பாது காப்பான முறையில், உரிய உபகரணங்கள் அணிந்து பணிகள் மேற்கொள்ள ,சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

அரசின் நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளர்கள் பெறுவதற்கு தேவை யான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பணியாளர்களின் குடும் பத்தைச் சார்ந்தவர்கள் பயன்பெறத்தக்க வகையில், கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை பெற்று, கடனுதவிகளை வழங்கிட நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சஃபை கரம்சாரி நிதி நிறுவனம் மூலமாக கட னுதவி வழங்கிட, மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எந்தவொரு சூழ்நிலையிலும் தூய்மைப் பணியாளர்கள் மனிதக் கழிவுகளை அகற்று வதில் ஈடுபடக்கூடாது.

பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிகளில், சுத்தம் செய்யும் பணிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ்,ரோபோஇயந்திரங்கள்பயன்படுத்துவதற்கானநடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தூய்மைப் பணியாளர் களுக்கான அனைத்து திட்ட ங்களையும் அலுவலர்கள் முறையாக செயல்படுத்திட வேண்டும்.

அவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய முறைகள், பணி ஓய்வுக் குரிய பணபலன் ஆகிய வற்றை எந்தவித கால தாமதமுமின்றி சரிவர வழங்கிடவும், அவர்கள் வசித்துவரும் இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், பணிபுரியும் கால முறைக்கேற்ப சம்பள உயர்வு வழங்கிடவும், ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் சம்பளம் தொடர்பான விபரங் களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அவ்வப்போது அவர்களுக் கென மருத்துவ முகாம்கள் நடத்திடவும், குடியிருப்பு அல்லாதவர்களுக்கு குடியி ருப்பு வசதி ஏற்படுத்தி தருவது குறித்தும், பணியின் போது இறப்பு ஏற்பட்ட நபர்க ளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்குவதற்கும் சம் பந்தப்பட்டதுறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனமக்கள், தூய்மைப் பணியாளர்களின் நலனிற்காக அரசின் பல்வேறுதிட்டங்களின் கீழ் தகுதியான நபர்களை பயன் பெறச் செய்து ,அதற்குரிய பலன்களை உடனடியாக கிடைக்கப்பெற செய்யும் வகையில், துறைசார்ந்த அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தேசிய தூய்மை பணியாளர் ஆணையகுழுத் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார். ஆதிதிராவிடர், பழங்கு டியினர் இனமக்கள், தூய் மைப் பணியாளர்கள் மற் றும் அனைத்து நலக்குழு உறுப்பினர்கள், தேசிய தூய்மைபணியாளர் ஆணையகுழு தலைவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அக்கோரிக்கைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அத் துறை சார்ந்த அலுவலர்களிடம் உரிய விளக்கத்தினை கேட்ட றிந்து, உரிய நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தினார்.

மனுக்களாக வழங்கப்பட்ட கோரிக்கைகள் மீது, பரிசீலித்து, தகுதியான கோரிக்கைகளின் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வ நாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே.கவிதா ,உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) என்.உமாதேவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வசந்த்ராம்குமார், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களின் சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img