கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தேசிய சுகாதார திட்டக்குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உலக சுகாதார மையத்தின் அங்கமான டில்லி தேசிய சுகாதார திட்டக்குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இரண்டு நாட்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். மக்கள் தொகை ஆய்வு மையத்தின் துணை பேராசிரியர் லேகா சுப்பையா உட்பட ஐந்து பேர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அறிக்கை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்தரிக்கும் தாய்மார்களுக்கு அரசின் நலத்திட்ட நிதி சரியாக கிடைக்கிறதா, குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறு பிரிவில் வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்
இது குறித்து அவர்கள் கூறுகையில், பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தாய், -சேய் மரண விகிதம் தமிழகத்தில் மிக குறைவாக உள்ளது. இந்த ஆய்வுகளின் பரிந்துரைகளை பிற மாநிலங்களில் அறி முகம் செய்வதே முக்கிய நோக்கம் என்றனர்.
இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். அசோகன், கிருஷ்ணகிரி அரசு மருத்துமனை உள்ளிருப்பு மருத்துவர் டாக்டர்.செல்வி, உதவி உள்ளிருப்பு மருத்துவர் டாக்டர்.மது, என்.சி.டி., மருத்துவர் டாக்டர்.கார்த்திகேயன் செவிலியர் கோ கிலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



