தொடைப் பகுதியில் வீக்கம் என்று பரிசோதித்தபோது, ஒன்பது வயது சிறுமியின் காலில் மிகவும் அரிதான எலும்பு கட்டி கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் காலில் இருந்த எந்த ஒரு எலும்பையும் நீக்காமல், எலும்பு கட்டி அறுவை சிகிச்சையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஒன்பது வயது சிறுமியின் பெற்றோர், குழந்தையின் இடது தொடையில் வீக்கம் ஏற்பட்டதற்கு எலும்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றனர். முழுமையான பரிசோத னைக்குப் பிறகு சிறுமியின் எலும்புக் கட்டியின் அரிய வடிவமான ஈவிங்ஸ் சர்கோமாவால் பாதிக்கப் பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
ஈவிங்ஸ் சர்கோமாவா என்பது எலும்புகளில் ஏற்படும் அரிய வகைப் புற்றுநோய். இது பொதுவாக குருத்தெலும்பில் அல்லது இடுப்பு பகுதியில் உள்ள நரம்புகளுக்கு அருகில் தொடையில் உள்ள எலும்பிலும் ஏற்படும். இது முக்கியமாக 20 வயதுக்கு உட்பட்டவர்களை பாதிக்கிறது. புற்றுநோய் செல்களை அழிக்க சிறுமிக்கு கீமோதெரபி சிகிச்சை தரப்பட்டது.
தொடை எலும்பை காலில் இருந்து வெட்டாமல், கட்டியை அகற்றுவதற்கும் குழந்தையின் காலைக் காப்பாற்றுவதற்கும், புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் எலும்பியல் அறுவை சிசிக்சை நிபுணர்கள் குழு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தது.
எக்ஸ்ட்ராகார்போரியல் ரேடியோ தெரபி சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட எலும்பு அகற்றப் பட்டு, பின் மீண்டும் எலும்புகள் சேர்க்கப்பட்டன.
இந்த புதுமையன செயல் முறை ஷிஸிமிளிஸி ஆல் அறிமுகப் படுத்தப்பட்டது.
எலும்பு துண்டிக் கப்படுவதைத் தவிர்ப்பதற் காக, புற்றுநோயியல் துறையில் சமகால மாற்றங்களைக் கொண்டு வர SRIOR தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
இந்த அறுவை சிகிச்சையை, டாக்டர்கள் கார்த்திகேஷ், பார்கவி, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மோகன், கோகுல், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள் கார்த்திகா, கிருஷ்ணபிரியா, விவேக், சேதுமாதவன், மயக்க மருந்து நிபுணர் ஜி.பி.சுந்தர்ராஜ், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் பி.குஹான் ஆகியோர் அடங்கிய குழு, ஷிஸிமிளிஸி இயக்குநரின் மேலான ஆலோசனையின் படி, புற்று நோயில் இருந்து மீண்டவரை வீடு திரும்பச் செய்தது



