கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரி மற் றும் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டி கையை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சிக்கு கேபிஆர் கல்லூரி தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி, கேபிஆர் பொறியியல் கல்லூரி முனைவர் மு.முகிலா, முதன்மைச் செயலர்
ஏ.எம்.நடராஜன், கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாலுசாமி அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர் கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஓணம் பண்டிகையை ஒட்டி மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக கல் லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலம் இடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகாபலி
நாடகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கல்லூரியின் சங்கமம் மற்றும் இக்ணிட்ரான் கிளப் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.



