fbpx
Homeபிற செய்திகள்கரூரில் சுதந்திர அமைப்பு தொடர் ஓட்டம்

கரூரில் சுதந்திர அமைப்பு தொடர் ஓட்டம்

கரூர் மாவட்டத்தில், நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட விளையாட்டு ஆணையம் இணைந்து நடத்திய, இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர், ஆட் சியர்அலுவலகத்தில் துவக் கிவைத்து பங்கேற்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தாந்தோணி அரசுகலைக் கல்லூரி, பாரதிதாசன் நகர் நாலாவது தெரு வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இத்தொடரோட்டம் முடி வுற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு வலர் லியாகத், நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் பிரிட்ஜஸ் கௌஷிக், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணியம், நேருயுவகேந்திரா நிகழ்ச்சி அலுவலர் ஜெயப்பிரகாசம், மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் செல்வம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img