fbpx
Homeபிற செய்திகள்ஏழை கல்லீரல் நோயாளிகளுக்கு விஜிஎம் மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்க ‘பீளீடு’ புதிய திட்டம் துவக்க...

ஏழை கல்லீரல் நோயாளிகளுக்கு விஜிஎம் மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்க ‘பீளீடு’ புதிய திட்டம் துவக்க விழா

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனையில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பீளீடு என்ற புதிய திட் டத்தின் துவக்கவிழா இன்று நடை பெற்றது.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனை மற்றும் அறக்கட்டளை ரோட்டரி மாவட்டம் 3201 இணைந்து “ப்ளீடு” எனும் திட்டத்தை இன்று துவங்கினர்.

இதன் துவக்க விழா நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் பிரசாத் கூறியதாவது,

ஆண்டுதோறும் கல்லீரல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற, விஜிஎம் மருத்துவமனை யானது கல்லீரல், சார்ந்த பல்வேறு நோய்களை கண்டறிந்து உள்ளது.

அதில் கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு திடீரென்று ரத்த வாந்தி, மலக்குடல் ரத்தப்போக்கு, கோமா நுண்கிருமிதொற்று, மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்ற பல்வேறு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது.

இவற்றில் மிகவும் ஆபத்தானது செரிமான பாதையில் ஏற்படுகின்ற ரத்தநாள வெடிப்பு. இந்த நோய் பாதிக்கப்பட்ட, ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவசமாக இந்த சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், விஜிஎம் மருத்துவமனை & அறக்கட்டளை மற்றும் ஆக்குருதி அறக்கட்டளை இனைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்த திட்டத்தை துவக்கி வைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக மார்ட்டின் ஹோமியோபதி நிறுவனத்தின் நிர்வாக இயக் குநர் லிமா ரோஸ் கலந்து கொண் டதுடன், இந்த திட்டத்தின் தன் மையறிந்து உடனடியாக 5 லட்ச ருபாய், நன்கொடையாக இந்த திட்டத்திற்காக வழங்கினார்.

மேலும் இந்த திட்டத்தின் மூல மாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள யாருக்கேனும் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் உடனடியாக விஜி எம் மருத்துவமனையில் இலவச மாக இதற்கான சிகிச்சையை, பெற் றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர் ராஜசேகர் சீனிவாசன், மற்றும் ரோட்டரி க்ளப் ஆபெ அக்ருதி உறுப்பினர்களான அர்ச்சனா பாட்டியா, காஞ்சனா சீனிவாசன், ஹேமா புருஷோத்தமன், ஜரீனா இக்பால், மார்ட்டின் ஹோமி யோபதி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் லீமா ரோஸ், மற்றும் விஜிஎம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் பிரசாத் மருத்துவர் சுமன் பிரசாத் மற் றும் மதுரா பிரசாத் சுமன், மருத் துவர் வம்சி, ராதா பிரசாத், மருத் துவர் கோகுல் கிருபாசங்கர், மற்றும் லயன்ஸ் க்ளப், லயன் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img