fbpx
Homeபிற செய்திகள்ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.44 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.44 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியர் இரா.வைத்திநாதன் ஆய்வு செய்தார்.

சுஞ்சல்நத்தம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.24.535 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள நாற்றுப்பண்ணை அமைக்கும் பணி, ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய பண்ணைக் குட்டை அமைக்கும் பணி, ரூ.77 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, ரூ.6.04 லட்சம் மதிப்பீட்டில் எம்.தண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டும் பணி, ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி மற்றும் ரூ.205.87 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை பணி ஆக மொத்தம் ரூ.2.44 கோடி மதிப்பீட்டிலான பணிகளை கூடுதல் ஆட்சியர் இரா.வைத்திநாதன் ஆய்வு செய்தார்.

அப்போது உதவி செயற்பொறியாளர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கௌரி, ரேணுகா, உதவி பொறியாளர் ஸ்ரீனிவாசன், பணிமேற்பார்வையளர் செல்வம் மற்றும் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img