இந்தியாவின் முன்னணி மீயூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் ஒன்றாகவும், 4.26 லட்சம் கோடி ரூபாய் சொத்து மேலாண்மை செய்து வரும் எச்டிஎப்சி மீயூச்சுவல் பண்ட் முதலீட்டு மேலாளராக விளங்கும், எச்டிஎப்சி சொத்து மேலாண்மை கம்பெனி லிமிடெட், புதிய நிதி திட்டத்தை வெளியிட்டுள்ளது.
“எச்டிஎப்சி நிப்டி50 ஈகுவல் வெயிட் இன்டெக்ஸ் பண்ட்” என்ற இந்த நிதி திட்டம், தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிப்டி50ன் கீழ் உள்ள கம்பெனிகளில் முத லீடு செய்யும்.
கடந்த 19 ஆண்டு களாக எச்டிஎப்சி ஏஎம்சி, பங்குச்சந்தை அளவீட்டு குறியீ டுகளில் மேலாண்மை செய்த அனுபவம் கொண்ட அதிக மேலாளர்களைக் கொண்ட நிறுவனமாக உள்ளது.
இந்த நிதியானது, பொருளாதார வளர்ச்சியை அடிப் படையாகக் கொண்ட முதலீட்டு வாய்ப்புகளை சீரான முறையில் நிர்வகித்து பயன்பெறும் நோக்கில் துவக்கப்பட்டுள்ளது.
நிப்டி 50 குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளிலும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் முதலீட்டினை மேற்கொள்ளும். இது, குறிப்பிட்ட பங்கு துறை சார்ந்த முதலீட்டு சிரத்தையை தவிர்க்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது.
நிப்டியில் உள்ள 50 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்கும்.
இந்த நிதியானது, ஒவ் வொரு காலாண்டிலும் தானியங்கி முறையில் சமநி லைப்படுத்தப் படுவதாகவும், அரையாண்டிற்கு ஒரு முறை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தானியங்கி முறையில் லாபத்தை மேற்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிதி திட்டம் ஆக. 4ல் துவங்கி, ஆகஸ்ட் 13-ல் நிறைவு பெறுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் 5 வணிக நாட்களில் மீண்டும் வாங்க முடியும்.
புதிய நிதி திட்ட அறிமுகம் குறித்து, எச்டிஎப்சி ஏஎம்சி முது நிலை மேலாளர் கிருஷன் குமார் தாகா பேசுகையில், “கடந்த 2-3 ஆண்டுகளாக பங்குச்சந் தையின் மேல் நோக்கிய போக்கு, நிறுவனங்களின் லாப விகிதம் உயர்ந்து வருவதை காட்டுகிறது.
தற்போதைய சந்தையின் போக்கு தற் போதைய நிதிக்கு சாதகமாக இருக்கும்,” என்றார்.



