கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர் களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் 5 குழந்தைகளுக்கு தலா ரூ.5 இலட்சம் வைப்பு தொகைக்கான ஆணையை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற் றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 இலட்சம் வைப்பீடு, கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 இலட்சம் நிவாரணத் தொகை, கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து உறவினர், பாதுகா வலரின் ஆதரவில் வள ரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, பெற் றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றும் கொள்ளும் என முதல் வர் 29.05.2021 அன்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர் களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 இலட்சம் வைப்பீடு செய்துஅக்குழந்தை 18 வயது நிறைவடையும் போது அந்தத் தொகையை அக்குழந்தைக்கு வட்டி யோடு வழங்கும் வகையில் முதல்வர் 16.06.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற் றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் 5 குழந்தைகளுக்கு தலா ரூ.5 இலட்சம் வைப்பு தொகைக்கான ஆணை யை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



