எச்டிஎப்சி சொத்து மேலாண்மை நிறுவனம், புதிய நிதி திட்டமான எச்டிஎப்சி மல்டி கேப் நிதி ஒன்றை துவக்குகிறது.
சிறு, நடுத்தர, பெரும் மூலதனங்களைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த நிதி பயனுள்ளதாக இருக்கும்.
குறைந்த பட்சம் 25 சதம் அளவில் இந்த நிறுவனங்களின் முதலீடுகள் இருக்கும். 25 சதம் நிதி மேலாளர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் பங்கு விகிதம் அமையும். இப்புதிய நிதி வெளி யீடு வரும் 23-ல் துவங்குகிறது. டிசம்பர் 7-ல் நிறைவு பெறுகிறது.
பல்வேறு சந்தை முதலீட்டு பிரிவுகளில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள், பல் வேறு சமயங்களில் மாறுபடுகின்றன. கடந்த 16 நிதியாண்டுகளில் (FY06 to FY21), பெரும் மூலதன நிறுவனங்கள் பங்குகள் 6 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப திட்டங்கள், ஒதுக்கீடுகளில் மாற்றங் கள் இருக்கும். விதிமுறைகள் அனைத்தும் திட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பி டப்பட்டுள்ளது.
இந்த நிதி திட்டத்திற்கான மே லாளராக கோபால் அகர்வால் செயல்படுவார். 19 ஆண்டுகள் நிதி மேலா ண்மை மற்றும் பங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் இவர். எச்டிஎப்சி மல்டி கேப்பண்ட் பற்றி கோபால் அகர்வால், “பல்வேறு சந்தை நிலைகளில் பல்வேறு அளவிலான மூலதனங்களை கொண்ட நிறுவனங்களின் பங்குகளை கவனித்து வந்துள்ளோம்.
எச்டிஎப்சியின் இந்த மல்டி கேப் திட்டமானது, ஒழுங்கு முறையில் பல்வேறு மூலதன நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரே நிதியாக இருக்கும்.
நீண்டகால அடிப்படையிலான பன்னோக்கு செயல் பாடுகளில், மாற்றம் பெறும் சூழ் நிலைகளில் இது சிறந்த தீர்வை தரும். இந்தியாவின் முன்னேற்றமான பாதை, சாதகமான சூழ்நிலைகள் நாட்டின் வளர்ச்சிக்கானதாக உள்ளது.
நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையிலான இந்த பங்கு முதலீடு நல்ல பலனை தரும்,” என்றார்.



