கோவை வடவள்ளி ரோட்டரி கிளப் சார்பாக, வடவள்ளி பகுதியில் உள்ள நடுநிலை பள்ளியில் மாணவ, மாணவிகள் உணவு உண்பதற்கு வசதியாக உணவக அறை கட்டியது. இதனை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரோட்டரி கிளப் 3201 மாவட்டம் சார்பாக சமூக பணி மாற்றத்தை உருவாக்கும் எனும் திட் டத்தின் கீழ் பல்வேறு சமுதாய நல பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் வடவள்ளி ரோட்டரி சங்கம் சார்பாக தொண்டாமுத்தூர் ஒன்றியம், மகாராணி நகர் பகுதியில் உள்ள நடுநிலை பள்ளியில் மாணவ, மாண விகள் வசதி யாக அமர்ந்து உணவு உண்பதற்கென உணவு அறை புதிதாக கட்டி அர்ப்பணிக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவுக்கு வடவள்ளி ரோட்டரி சங்கத் தலைவர் ஜான் சிங்கராயர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜசேகர் ஸ்ரீனிவாசன், துணை ஆளுநர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய டைனிங் ஹாலை திறந்து வைத்தனர்.
இதில் பேசிய மாவட்ட ஆளுநர் ராஜசேகர், ரோட்டரி வடவள்ளி சார்பாக பல்வேறு சமூக நலப்பணிகள் செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், குறிப்பாக பெண் குழந்தைகள் கல்வி மற்றும் மேம்பாடு குறித்து கூடு தல் கவனம் செலுத்தி வருவ தாக தெரிவித்தார்.
பள்ளிக்கு அருகில் வசிக்கும் பழனிசாமி, ரேணுகாதேவி மற்றும் குடும்பத்தார் நிதி உதவி யுடன் கட்டபட்ட உணவக அறை திறப்பு விழாவில், ஜி.ஜி.ஆர்.தங்கராஜ், வடவள்ளி ரோட்டரி சங்கச் செயலாளர் ப்ராங்க்ளின், சார்ட்டர் பிரசிடென்ட் மாணிக்கவாசகம், மண்டல நிர்வாக தலைவர் ராஜன் ஆறுமுகம், பள்ளி தலைமை ஆசிரியை அகிலா மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் விஜய், ராதாமோகன், இளங்கோ, கருணாகரன், ரமேஷ் சுப்ரமணியம்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.



